அட்வைஸ் பண்றது ரொம்ப ஈஸி.... அதான் கொஞ்சம் நம்ம தமிழ் வலைப் பூக்கள் வாசகர்களுக்காக ஆரோக்கிய அட்வைஸ்..
WATER THEROPHY
நிறைய தண்ணீர் அருந்துவது அரோக்கியமானது என்று நாம் கேட்டிருக்கிறோம், படித்திருக்கிறோம். ஆனால் சரியான முறையில் தண்ணீர் அருந்தாவிட்டால் அப்படியே எதிர் மறை விளைவுகளை ஏற்படுத்தும். சரி, எப்படித்தான் குடிக்கலாம்? காலை எழுந்தவுடன், முதல் ஆகாரம் தண்ணீர்தான். முதலில் ஒரு வாரத்திற்க்கு ஒரு தம்ளர் மட்டும் குடிக்கவேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நீரின் அளவை அதிகரிக்க வேண்டும்.
இதனால் என்ன பயன் தெரியுமா? வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளும் சரியாகும். மலச்சிக்கல் தீரும். வயிற்று வலி, வாயுத்தொல்லை, உடல் உஷ்ணம் இவை எல்லாம் சரியாகும். (லேகியம் விற்பவன் போல மாறி விட்டான் என்று நீங்கள் சொல்வது எனக்கு கேட்க்கிறது) சரி வேறு எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும்? உணவு உண்ணும் முன்பு கால் டம்ளர் மட்டும் (வயிற்றை நனைக்க) குடிக்கவும். பிறகு சாப்பிட்ட பின்புதான் மீண்டும் நீர் குடிக்க வேண்டும். ஒரு நாளில் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒரு டம்ளர் வீதம் அதிக பட்சம் 2-3 லிட்டர் வரை குடிக்கலாம். எப்பவுமே நம்ம ஆட்கள் கொஞ்சம் ஒவர் புத்திசாலி... சில பேர், ஒரே தடவையில் ஒரு லிட்டர் வரை குடிக்க முயல்வார்கள்.இதானால் கோமா ஸ்டேஜ் வரை கூட போக வாய்ப்புண்டு. எனவே சரியான அளவில் தண்ணீர் (அந்த தண்ணீ இல்லை) அருந்தி ஆரோக்கியமாக வாழுங்கள்.
Monday, March 31, 2008
Saturday, March 29, 2008
அகிலனின் - கனவுகளின் தொலைவு
கனவுகளின் தொலைவு http://agiilankanavu.blogspot.com/ வலைத் தளத்தை ஒருமுறை தரிசித்து பாருங்கள். கீழே காணும் கவிதை பிரியம் என்ற தலைப்பில் திரு. அகிலன் எழுதியது. வாசித்துப் பாருங்கள்... மிக அருமை...
பிரியம்
அவள் அழைத்துப்போன
கனவின் பசிய நிலத்தில்
வானவில்லின்
வர்ணங்களைக்கொண்ட
பறவையின் பாடல்
வழிந்து கொண்டிருந்தது திசையெங்கும்.
பாடலின்திசைகளில்
நான் கிறங்கிய கணத்தில்
சடுதியாய் நீங்கிப்போனாள்
கூடவே போயிற்று
அவளது நிலமும்
வானவில் பறவையும்.
நான் அலைந்துகொண்டிருக்கிறேன்.
அந்த கனவுக்குள்
மறுபடியும் நுழையும்
திசைகளைத் தேடி.
நன்றி : அகிலன்.
புலம்பல்
மானுடம் புலம்பியது
இது என்ன மழை , விடவே மாட்டேங்குதே !
ஒரு நல்லது கெட்டதுக்கு போக முடியுதா ??
சளி , காய்ச்சல் வேற வாட்டுது ..
சனியன் பிடித்த மழை எப்போதான் விடுமோ ???
மற்றொரு முறை அதே மானுடம் புலம்பியது ...
என்ன வெயில்...
என்ன கொடும சார் .... தாங்கவே முடியல...
மழை வேற வரவே மாட்டேங்குது ...
அனல் வாட்டுது... ஒரு மழை பெஞ்சா எப்படி இருக்கும்!
ஷ்ஷ்ஷ் ... அப்பாடி.......
இதுதான் உலகம்.... இதுதான் வாழ்க்கை....
இது என்ன மழை , விடவே மாட்டேங்குதே !
ஒரு நல்லது கெட்டதுக்கு போக முடியுதா ??
சளி , காய்ச்சல் வேற வாட்டுது ..
சனியன் பிடித்த மழை எப்போதான் விடுமோ ???
மற்றொரு முறை அதே மானுடம் புலம்பியது ...
என்ன வெயில்...
என்ன கொடும சார் .... தாங்கவே முடியல...
மழை வேற வரவே மாட்டேங்குது ...
அனல் வாட்டுது... ஒரு மழை பெஞ்சா எப்படி இருக்கும்!
ஷ்ஷ்ஷ் ... அப்பாடி.......
இதுதான் உலகம்.... இதுதான் வாழ்க்கை....
Tuesday, March 18, 2008
மழைக் காலம்
இன்னும் மழை நிற்க்க வில்லை. அதுதான் மழைக் கவிதை தொடர்கிறது.
மழைக் காலங்களின்
மண் வாசனை எப்போதும்
மனதைக் கிறங்கடிக்கும்.
நனைந்து போன
சாலைகளின் ஒரங்களில்
புதுக்குடைகளாய் காளான்கள்
கம்பீரம் காட்டும்.
புல்வெளிகளின் புதிய
பச்சை நிறமும், பெயர் தெரியாத
காட்டுப் பூக்களின் நறுமணமும்
மனதை வருடும்.
எப்போதோ, யாராலோ
பயன்படுத்தப்பட்ட,
அனேகமாய் அடையாளம் இழந்த
ஒற்றையடிப் பாதைகள்
கவனம் ஈர்க்கும்.
கிளர்ச்சியடைந்த
காட்டுக்குயில்களின் கான இசை
இதயம் தொலைக்கும்.
புது நீர் தாங்கும்
குளங்கள் - அதில்
உயிர்களை நிரப்பும்.
ஆயிரம் அர்த்தம் சொல்லும்
அழகிய மழைக்காலமே! - உன்
ஒவ்வொரு வருகையிலும்
என் வயதைப் புதைத்து,
மனசைத் தொலைக்கிறேன்.
-- என் மனசு
Saturday, March 15, 2008
இப்படிக்கு ROSE
இரண்டு நாட்கள்ளுக்கு முன்பு VIJAY TV இல் ஒளிபரப்பான இப்படிக்கு ROSE TV SHOW பல அதிர்வுகளை சின்னத் திரையில் ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் குறிப்பாக பாலியல் தொழிலாளர்களை களம் இறக்கி பல முக்கியமான விவாதங்களை முன் வைத்து இருக்கிறது. இரண்டு பாலியல் தொழிலாளர்கள் மற்றும் எழுத்தாளர் சாருநிவேதிதா கலந்து விவாதித்தது மிகவும் உருப்படியாக இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குஷ்பு வை அவரது சொந்த கருத்துக்காக கடுமையாக விமர்சித்த கட்சிகள் இந்த ஒளிபரப்பை பார்த்திருந்தால் வாழ்க்கையின் நிதர்சனங்களை உணர்ந்து வாய் பேசா மௌனி ஆகி இருந்து இருப்பார்கள். நிஜ வாழ்வின் உண்மைகளை, பல ஆண்களின் பொய் முகங்களை, இன்றைய நாட்டின் நிலைமையை அப்பட்டமாக வெளிப்படித்தியது . இனி இதைப் போல பல விவாதங்கள் இன்னும் பல நடை பெற வேண்டிய அவசியத்தையும் இது உணர்த்துகிறது. நீங்கள் யாரேனும் இந்நிகழ்ச்சியை பார்த்தீர்களா?
Friday, March 14, 2008
தண்ணி மாமே! தண்ணி !!
மழைக் காலம்
Wednesday, March 12, 2008
Saturday, March 8, 2008
திருச்சி மலைக் கோட்டை
கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம், கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். ஆனால் நமது ஊரில் கோவில்களின் நிலை எப்படி இருக்கிறது? அதை நாம் எப்படி பரமரிக்கிறோம் என்றால், நம்மில் பலருடைய பதில் மௌனமே! நம்மில் பலர்
கோவில்களை அசுத்தப்படுதுவதைப் பற்றி துளியும் மனக்கிலேசம் கொள்வதில்லை. தூய்மையான கோவில்கள் மிக அரிதாகிப் போய் விட்டது. திருச்சியில் உள்ள ஐயப்பன் கோவில் தான் நான் பார்த்தவைகளில் மிக நல்ல முறையில் பராமரிக்கப் படுகிறது. நிறைய கோவில்களில் கரி மற்றும் எண்ணெய் கொண்டு அவரவருக்கு பிடித்த பெயர்களை, வாகன எண்களை கோவில் பிரகார சுவர்களில் கிறுக்கி சுவரை அசிங்கப் படுத்தி இருப்பார்கள். திருச்சி மலைக் கோட்டை கோவிலும் அதற்கு விதி விலக்கல்ல. கோவில் படி ஏறும்போது கோவில் வரலாறை விளக்கி வைக்கப் பட்ட டிஜிட்டல் பேனர் களில் ஒரு துளி இடம் இல்லாமல் பேனாவால் கிறுக்கி வைக்கப் பட்டு வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளை மிகவும் முகம் சுளிக்க வைக்கிறது ( பார்க்க படம் ). மேலும், ஸ்ரீரங்கம் கோவிலை குப்பை கூளம்ஆக்கி விட்டார்கள். எங்கு பார்த்தாலும் குப்பைகள், பிளாஸ்டிக் பேப்பர் , எச்சில் இவைகளால் நிறைந்து இருக்கிறது. திருச்சியைப் பொறுத்த வரை மலைக் கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் கோவில்கள் தான் வெளி நாட்டுப் பயணிகள் மிகவும் வந்து போகும் இடங்களில் ஒன்று மற்றும் நமது பாரம்பரிய சின்னங்களில் ஒன்று. அதை நமது தலைமுறை காப்பாற்ற வேண்டியது கடமை. புதியது செய்யாவிடினும் இருப்பதை அழிக்காமல் இருப்பது நலம். எப்போது அதை நாம் உணர்வது ????
கோவில்களை அசுத்தப்படுதுவதைப் பற்றி துளியும் மனக்கிலேசம் கொள்வதில்லை. தூய்மையான கோவில்கள் மிக அரிதாகிப் போய் விட்டது. திருச்சியில் உள்ள ஐயப்பன் கோவில் தான் நான் பார்த்தவைகளில் மிக நல்ல முறையில் பராமரிக்கப் படுகிறது. நிறைய கோவில்களில் கரி மற்றும் எண்ணெய் கொண்டு அவரவருக்கு பிடித்த பெயர்களை, வாகன எண்களை கோவில் பிரகார சுவர்களில் கிறுக்கி சுவரை அசிங்கப் படுத்தி இருப்பார்கள். திருச்சி மலைக் கோட்டை கோவிலும் அதற்கு விதி விலக்கல்ல. கோவில் படி ஏறும்போது கோவில் வரலாறை விளக்கி வைக்கப் பட்ட டிஜிட்டல் பேனர் களில் ஒரு துளி இடம் இல்லாமல் பேனாவால் கிறுக்கி வைக்கப் பட்டு வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளை மிகவும் முகம் சுளிக்க வைக்கிறது ( பார்க்க படம் ). மேலும், ஸ்ரீரங்கம் கோவிலை குப்பை கூளம்ஆக்கி விட்டார்கள். எங்கு பார்த்தாலும் குப்பைகள், பிளாஸ்டிக் பேப்பர் , எச்சில் இவைகளால் நிறைந்து இருக்கிறது. திருச்சியைப் பொறுத்த வரை மலைக் கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் கோவில்கள் தான் வெளி நாட்டுப் பயணிகள் மிகவும் வந்து போகும் இடங்களில் ஒன்று மற்றும் நமது பாரம்பரிய சின்னங்களில் ஒன்று. அதை நமது தலைமுறை காப்பாற்ற வேண்டியது கடமை. புதியது செய்யாவிடினும் இருப்பதை அழிக்காமல் இருப்பது நலம். எப்போது அதை நாம் உணர்வது ????
Friday, March 7, 2008
பாசக்கார பய...
சமீபத்தில் ஒரு இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட போது கண்ட காட்சி, அந்த இறந்து போன நபர் ஆசையாக வளர்த்த நாய் அவரது மறைவின் போது அருகிலிருந்த வீட்டின் கொல்லைப் புறம் கட்டப்பட்டிருந்தது. எல்லோரும் அவரது மறைவின் காரணம் துக்கப்பட்டு இருந்ததால் இரண்டு நாட்களாக அந்த நாயை யாரும் கண்டு கொள்ளவே இல்லை. பாவம் சாப்பாடு போடக் கூட மறந்து விட்டார்கள். அந்த நாய் தன்னை யாரும் கண்டு கொள்ள வில்லையே என்று அங்குமிங்கும் அலை மோதியது. தன்னுடைய எசமானன் எங்கே என்று தேடியது, தவித்தது. தனக்கு ஒருபோதும் இப்படி ஆனதில்லையே என்று அந்த பாசக்கார ஜந்து பரிதவித்தது. மூன்றாம் நாள் காலை அந்த இறந்து போனவரின் மகள் நியாபகம் வந்தவளாக ஓடோடி வந்து, நாயை அவிழ்த்து தனது வீட்டிற்க்கு எடுத்துச் சென்றாள். அவளைக் கண்டவுடன் அந்த நாய் வாலை ஆட்டியபடி பாசத்துடன் அவளிடம் தாவிச் சென்றது. இப்போதும் அந்த நாய் அந்த வீட்டு வாசலில் கட்டப் பட்டிருக்கிறது. சாலையில் செல்லும் ஒவ்வொருவரையும் பார்த்தபடி தன் எசமானன் இதோ வந்து விடுவான், தன்னை அவன் மடியில் வைத்து கொஞ்சுவான் என்று எதிர் பார்ப்புடன் காத்திருக்கிறது...
-- இன்னும் எழுவோம்ல...
Subscribe to:
Posts (Atom)