பக்கங்கள்

Sunday, August 26, 2012

நஞ்சை உண்ட சிவன் ! நஞ்சுண்டேஸ்வரா கோவில் @ நஞ்சன்கூடு, கர்நாடகா (Nanjundeswara)

நஞ்சுண்டேஸ்வரர் - எங்கள் குலதெய்வ சாமி 

மூலவர் கவசம் 
இராஜ கோபுரம் 

500-1000 வருடத்திற்கு   மேல் பழமை வாய்ந்த  இந்த நஞ்சுண்டேஸ்வரர்  கோவில் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூரு செல்லும் வழியில் 100 வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. ஆலகால விசத்தை உண்ட சிவன் இங்கு அருள் பாலிக்கிறார். 

கபினி ஆறு அருகே பாய்கிறது . நதியில் நீராடி பின் சிவனை வணங்கலாம்.

திப்பு சுல்தானின் பட்டத்து யானையின் கண் பார்வையினை சரி செய்த அற்புத சிவன் இவர் . அதனால் மகிழ்ந்த திப்பு சுல்தான் மரகத லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டான் . பிரிட்டிஷ் அதிகாரி ஒருவரின்  குறையும் இவர் தீர்த்து வைத்து உள்ளார் . எனவே ஆங்கிலேயர்கள் இந்த கோவிலை சேதபடுத்த வில்லை. 

அற்புதங்கள் அருளும் வெண்ணை விநாயகர் 
பன்னாரி அம்மன் கோவிலைத்  தாண்டி  ஆசனூர்  செல்லும் மலைப்பாதை  பயணம்  மிகவும் அருமையானது . புள்ளி மான்கள் , குரங்குகள், யானைகள்  அழகிய மேற்குத்  தொடர்ச்சி  மலை முகடுகளை , சில்லென்ற காற்றை அனுபவிக்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட தங்கும் வசதிகளுடன் 
சங்கம தீர்த்தம் 

புதருக்குள் ஒரு குட்டி யானை 
கோபுரத்தில் சிற்பம் 

மலைப்பயணத்தில் .....
மலைப்பயணத்தில் ....


சத்தியில் (ஈரோடு  மாவட்டம்) இருந்து 2 1/2 மணி பயணத்தில் கோவிலை அடையலாம். அனைவரும்  தரிசிக்க வேண்டிய சக்தியுள்ள சிவன்.

Wednesday, August 15, 2012

உண்மையான இந்தியனுக்கு ஒரு கேள்வி : எது சுதந்திரம்?

இன்று 66 வது சுதந்திர தினம் கொண்டாடுகிறோம். ஆனால் இது உண்மையான  சுதந்திரமா ? 

சொந்த நாட்டின் மீனவக் குடிமகனை காப்பாற்ற முடியவில்லை! வெளிநாடு வாழ் இந்தியனுக்கு குரல் கொடுக்கும் நாம் சொந்த நாட்டின் குடிமகனின்  சவக்குழிக்கு மேல் நின்று கொண்டல்லவா சாகசம் பேசுகிறோம்?! என்ன ஒரு வெட்கக்கேடு !!! 

இன்னும் சுமார் 1.6 இலட்சம்  கொத்தடிமைகள் இந்தியாவின் குவாரிகளில், வட இந்திய முறுக்குக் கடைகளில், சாலையோரப் பணிகளில், தொலை தூர  எ ஸ்ட்டேட்களில் ,  கட்டுமானப் பணிகளில்  முடங்கியுள்ளனர் . 

அரசுத்துறைகளின் மற்றும் அரசியல்வாதிகளின் லஞ்ச லாவண்யங்களில் நாட்டின் பொருளாதாரம் சிக்கி சீரழிந்து கொண்டு இருக்கிறது. நாட்டின்  கனிம வளங்கள், சுயநல தனி நபர்களை ,  கடமை தவறிய அதிகாரிகளை வளப்படுத்தி இருக்கிறது...

எங்கும் கொள்ளை ! எதிலும் கொள்ளை !!!
ஆற்றிலும் கொள்ளை! வனத்திலும் கொள்ளை! மலையிலும் கொள்ளை ! சுடுகாட்டிலும் கொள்ளை !  ஆன்மிகவாதிகள்  பெயரில் கொள்ளை ! யோகா குருக்கள் கொள்ளை !  அடப் போங்கையா ....டாஸ் மாக்கில் கூட கொள்ளை அடிக்கிறார்கள் ....

கல்வித்தந்தைகள் (இல்லை கர்ப்பரேட் தந்தைகள்), LKG முதல் பட்டப் படிப்பு வரை மாணவர்களைக் கொள்ளை அடிக்கிறார்கள்..

நடுத்தெருவில் பெண்கள் மானபங்கப் படுத்தப்படுகிறார்கள். தந்தையின் முன் மகளை மானபங்கம் செய்கிறார்கள். வீட்டு வேளைகளில், நிறுவனங்களில் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப் படுகிறார்கள் .

இந்த இலட்சணத்தில் 66 வது சுதந்திர தினம் கொண்டாடுகிறோம். அதுவும் துப்பாக்கி முனைகளில் ?!  எங்கு  குண்டு வெடிக்கும்? எங்கு தீவரவாதிகள் கைவரிசை இருக்கும் என்று ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் போலீஸ் மற்றும் ராணுவ சுவர்களின் பின்னால் நமது சுதந்திர விழாக்கள் நடக்கின்றன. 

இதுவல்ல சுதந்திரம்.... உண்மையான சுதந்திரம் இன்னும் தொலைவில் உள்ளது ....