பக்கங்கள்

Sunday, May 11, 2014

திருமண தோஷங்கள் நீக்கும் நங்கநல்லூர் ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேயர்

~~~~ திருமண தோஷங்கள் நீக்கும் நங்கநல்லூர் ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேயர் (32 அடி உயர ஆஞ்சநேயர் ) ~~~~

சென்னை, நங்கநல்லூரில் 32 அடி உயர பக்த விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில், ரமணி அண்ணாவால் ஸ்தாபிக்கப்பட்டது.

32 அடி உயரத் திருமேனி என்றபோதும் கைக்கூப்பித்தான் நிற்கிறார். ‘வளரவளர பணிவும் வளர வேண்டும்’ என்கிற உபதேசமாகத் தோன்றுகிறது இந்தக் காட்சி!

சாஸ்திரங்களில் குறிப்பிட்டுள்ளதை போல 32 லட்சணங்களைக் கொண்டவர் இந்த ஆஞ்சநேயர். இந்த இடத்துக்கு இவர் வந்ததிலிருந்து,மெய்சிலிர்க்க வைக்கும் பல அதிசயங்களை நிகழ்த்தி கொண்டிருக்கிறார். இந்த திருமேனியை ஒரு கொட்டகையில் வைத்து செதுக்கி கொண்டிருந்த நேரத்தில், விடியற்காலையில், அதாவது 2.30-3.00 மணி அளவில் தினமும் மரக்கட்டை காலணி (பெரிய மகான்கள் அணிந்து கொள்வது) சப்தம் கேட்பதை சிற்பிகள் உணர்ந்திருக்கிறார்கள்.

இந்த சத்தம் எங்கிருந்து வருகிறது? எப்படி வருகிறது? என பெரியவர்களை கேட்டபோது, பக்கத்தில் இருக்கும் ஸ்ரீராகவேந்திரர் ஆலயத்திலிருந்து ஸ்ரீ ராகவேந்திரர்தான் தம் இஷ்ட தெய்வமான ஆஞ்சநேயரை தரிசிக்க வருகிறார் என்று சொன்னார்கள்.

இதேபோல இன்னொரு சம்பவம்: ஆஞ்சநேயரின் சிலைக்கு உறுதி ஊட்டுவதற்காக, 40 அடி தொட்டியில் தண்ணீர் நிரப்பி, அதில் சிலாரூபத்தை வைத்திருந்தோம். தீடீரென ஒருநாள், தொட்டி உடைந்து போய் விட்டது. மனம் சஞ்சலப்பட்டு பெரியோர்களிடம் கேட்டபோது, “தானாகவே தண்ணீர் தொட்டி உடைந்தது நல்ல சகுணம்தான்” என்று கூறினார்கள். இப்படி பலப்பல சம்பவங்களைச் சொல்லலாம்.

பிரமாண்டமாக காட்சியளிக்கும் ஆஞ்சநேயருக்கு பிரதி சனிக்கிழமை தோறும் விஷேச பூஜைகள் நடக்கிறது. அது தவிர ராமர் அவதரித்த நாளாம், ராம நவமி, அதனை ஒட்டி நடக்கப்படும் ராம உற்சவம் போன்ற வைபோகங்களில் வடமாலை , மற்றும் துளசி மாலைகள் சார்த்தப்பட்டு விஷேச பூஜைகள் நடத்தப்படுகிறது. மேலும் அனுமன் ஜெயந்தி உற்சவத்தில் சுவாமிக்கு அபிஷேக அலங்காரத்துடன் விஷேச பூஜைகள் நடக்கிறது.

ஆஞ்சநேயரை வணங்கினால் திருமண தோஷங்கள், புத்திர பாக்கியம் கிட்டும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் இளம் வயதினர் ஏராளமானோர் ஆஞ்சநேயரை வழிபட்டு செல்கின்றனர். கோயில் அதிகாலை 3 மணியளவில் திறந்து மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. பிறகு 4.30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter
Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

No comments: