பக்கங்கள்

Sunday, May 11, 2014

நம்பிக்கை துரோகம்...!


நம்பிக்கை துரோகம் !

நம்பிக்கை துரோகம்...
திட்டமிட்டு செய்வதும்....
தற்செயலாய் செய்வதும்..
விளயாட்டாய் செய்வதும்..
தெரிந்தே செய்வதும்..
சுயலாபத்திர்க்காக செய்வதும்..
என எப்படி ...
நியாயபபடுத்தினாலும்..
மன்னிக்க முடியாத
மாபாவம்...!

இதைவிட..
ஒருமுறை
மன்னிக்கப் பட்ட
நம்பிக்கை துரோகம்..
மறுபடியும் ...
இன்னொருமுறை ...
துளிர் விட்டால்..
அது -
மீளவே முடியாத
மிகபெரிய சாபம்...!

நம்பிக்கை துரோகம் ..
உங்களுக்குள் எட்டிப்பார்க்கிறது ...
என யார் சொன்னாலும்..
எதிர் வாதம் வேண்டாம்..
வேரோடு ..
அழிக்க முயலுங்கள்...
உங்கள் வாழ்க்கை ...
பலம் பெறும்...!

நீங்கள் புரிந்த ..
நம்பிக்கை துரோகத்தை ...
ஒருபோதும்..
நியாயபபடுத்தா தீர்கள்...!
தவிர்த்து விடுங்கள் ..
மனித தன்மை ...
உங்களுக்குள் வாழும்...!

நம்பிக்கை துரோகாதீர்க்கான ..
காரணங்களை ..
வரிசை படுத்த வேண்டாம்...
விட்டு விலகுங்கள்..
உறவுகளில் ....
உண்மை விதைக்கபடும்...!

நம்பிக்கை துரோகத்தினால் ...
நீங்கள் அடைந்த ...
சுய லாபம்..
உங்களுக்குள் ...
கலக்கும் நச்சு..
சுத்தப்படுங்கள்..
சுகமான ..
சுதந்திர திருப்தி ...
உங்களிடம் மட்டுமே...!

நம்பிக்கை துரோகம் ..
உங்களுக்குள் எட் டி பார்த்தால்...
எல்லாமே ..
கேவல பட்டு போகும்...!
தோல்வியும்..
விரக்தியும் ..
நஷ்டமும்...
சோகமும்...
தடையும்..
தொடர்ந்து கொண்டே போகும்..!

நம்பிக்கை துரோகம்
நம் வாழ்க்கை
அகராதியில்
நீக்கபட வேண்டும்...!

பிறகென்ன ....

நமது வாழ்க்கை
முழுவதும்
நம்மோடு
நம்பிக்கையும்
துணை வரும்.....!...!


Thanks: http://polimershafi.blogspot.in/2013/09/blog-post_27.html


Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

திருநந்திக்கரை -- அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில்



 திருநந்திக்கரை --அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில்

--குடைவரை கோயில் ( 1000-2000 வருடங்களுக்கு முன்)--

கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றன. இவற்றை சிவாலய ஓட்ட கோயில்கள் என்கின்றனர்.

சிவராத்திரி திருநாளின்போது இந்த 12 கோயில்களுக்கும் ஓடியே சென்று வழிபடுவது பக்தர்களின் வழக்கமாக இருக்கிறது. இவற்றிற்கு இடையேயான தூரம் 100 கி.மீ., இப்போதும் பக்தர்கள் ஓடிச்செல்லும் வழக்கத்தை கைவிடாமல் வைத்திருக்கிறார்கள். இவற்றில் திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயிலும் ஒன்று.

இந்த கோயிலின் விசேஷமே நட்சத்திர மண்டபம் ஆகும். 27 நட்சத்திர மண்டலம் கொண்ட கண துவாரங்கள் இங்கு உள்ளன. இந்த மண்டபத்தில் ஆண்டிற்கு 52 வாரங்கள் என்பதைக் குறிக்கும் வகையில் மண்டபத்தைச் சுற்றி 52 மரக்கட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டைகளில் நட்சத்திரங்களின் அதிதேவதை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

மண்டபத்தை 27 நட்சத்திரத்தை சேர்ந்தவர்களும் ஒரு தடவை சுற்றிவந்தால் ஒரு ஆண்டுகாலம் சிவன் கோயிலை சுற்றி வந்த பலன் கிடைக்கிறது.







Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

முட்டம் கடற்கரை ... (Muttam Beach)

அலைகள் ஓய்வதில்லை, கடலோர கவிதைகள் உள்பட பல்வேறு தமிழ் சினிமாக்கள் படம்பிடித்துக் காட்டியுள்ள இடம் முட்டம் கடற்கரை..

தமிழகத்தின் அழகிய கடற்கரை என்றால், அதில் முதல் இடத்தை முட்டம் கடற்கரைதான் பிடிக்கும். பாறைகள் நிறைந்து காணப்படும் தமிகத்தின் கடற்கரைகளில் இதற்கு தான் முதலிடம். இந்த கடற்கரைக்கு வடமேற்கில் செம்மண் அகழிகளும் உள்ளன. இதுபோன்ற பாங்கை வேறு எங்கும் பார்க்க இயலாது.

கடற்கரை என்றாலே நீண்ட மணற் பரப்பை மட்டுமே அறிந்திருக்கும் மக்களுக்கு இந்த பகுதி ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.

பாறைப் பகுதிக்கும், கடற்பகுதிக்கும் இடைப்பட்ட இடத்தில் கடற்கரை. எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். பாறைப் பகுதிகளில் கூட தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சற்று அபாயமான கடற்பரப்பு என்றும் கூறலாம்.இங்கு மெரினாவில் செய்வது போல குளியல் எல்லாம் செய்ய இயலாது. கடற்கரை காற்றில் மிதந்தவாறு நன்றாக ஓடியாடி விளையாடலாம்..



 

திருமண தோஷங்கள் நீக்கும் நங்கநல்லூர் ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேயர்

~~~~ திருமண தோஷங்கள் நீக்கும் நங்கநல்லூர் ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேயர் (32 அடி உயர ஆஞ்சநேயர் ) ~~~~

சென்னை, நங்கநல்லூரில் 32 அடி உயர பக்த விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில், ரமணி அண்ணாவால் ஸ்தாபிக்கப்பட்டது.

32 அடி உயரத் திருமேனி என்றபோதும் கைக்கூப்பித்தான் நிற்கிறார். ‘வளரவளர பணிவும் வளர வேண்டும்’ என்கிற உபதேசமாகத் தோன்றுகிறது இந்தக் காட்சி!

சாஸ்திரங்களில் குறிப்பிட்டுள்ளதை போல 32 லட்சணங்களைக் கொண்டவர் இந்த ஆஞ்சநேயர். இந்த இடத்துக்கு இவர் வந்ததிலிருந்து,மெய்சிலிர்க்க வைக்கும் பல அதிசயங்களை நிகழ்த்தி கொண்டிருக்கிறார். இந்த திருமேனியை ஒரு கொட்டகையில் வைத்து செதுக்கி கொண்டிருந்த நேரத்தில், விடியற்காலையில், அதாவது 2.30-3.00 மணி அளவில் தினமும் மரக்கட்டை காலணி (பெரிய மகான்கள் அணிந்து கொள்வது) சப்தம் கேட்பதை சிற்பிகள் உணர்ந்திருக்கிறார்கள்.

இந்த சத்தம் எங்கிருந்து வருகிறது? எப்படி வருகிறது? என பெரியவர்களை கேட்டபோது, பக்கத்தில் இருக்கும் ஸ்ரீராகவேந்திரர் ஆலயத்திலிருந்து ஸ்ரீ ராகவேந்திரர்தான் தம் இஷ்ட தெய்வமான ஆஞ்சநேயரை தரிசிக்க வருகிறார் என்று சொன்னார்கள்.

இதேபோல இன்னொரு சம்பவம்: ஆஞ்சநேயரின் சிலைக்கு உறுதி ஊட்டுவதற்காக, 40 அடி தொட்டியில் தண்ணீர் நிரப்பி, அதில் சிலாரூபத்தை வைத்திருந்தோம். தீடீரென ஒருநாள், தொட்டி உடைந்து போய் விட்டது. மனம் சஞ்சலப்பட்டு பெரியோர்களிடம் கேட்டபோது, “தானாகவே தண்ணீர் தொட்டி உடைந்தது நல்ல சகுணம்தான்” என்று கூறினார்கள். இப்படி பலப்பல சம்பவங்களைச் சொல்லலாம்.

பிரமாண்டமாக காட்சியளிக்கும் ஆஞ்சநேயருக்கு பிரதி சனிக்கிழமை தோறும் விஷேச பூஜைகள் நடக்கிறது. அது தவிர ராமர் அவதரித்த நாளாம், ராம நவமி, அதனை ஒட்டி நடக்கப்படும் ராம உற்சவம் போன்ற வைபோகங்களில் வடமாலை , மற்றும் துளசி மாலைகள் சார்த்தப்பட்டு விஷேச பூஜைகள் நடத்தப்படுகிறது. மேலும் அனுமன் ஜெயந்தி உற்சவத்தில் சுவாமிக்கு அபிஷேக அலங்காரத்துடன் விஷேச பூஜைகள் நடக்கிறது.

ஆஞ்சநேயரை வணங்கினால் திருமண தோஷங்கள், புத்திர பாக்கியம் கிட்டும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் இளம் வயதினர் ஏராளமானோர் ஆஞ்சநேயரை வழிபட்டு செல்கின்றனர். கோயில் அதிகாலை 3 மணியளவில் திறந்து மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. பிறகு 4.30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

Saturday, May 10, 2014

குரு இருந்த மலை " குருந்தமலை" (இன்னொரு பழனி ) - அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி கோயில், காரமடை (கோவை)


காரமடையிலிருந்து 5 கி.மீ. தொலைவில், கோயம்புத்தூரிலிருந்து 24 கி.மீ. தொலைவிலும்  அமைந்துள்ளது. 

சுமார் 750 வருடங்களுக்கு முன் இக்கோவில் உருவானதாக தெரிகிறது.  ஆலயத்தில் இடம்பெற்றுள்ள சிற்பங்கள் ஹோய்சாள மன்னர் காலத்தை ஒத்து இருக்கின்றன..

செல்வம் பெருகவும், புத்திரபேறு இல்லாத தம்பதியினர் குழந்தை வேலாயுதனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.

இங்கு "குருந்த மரங்கள்" நிறைய இருந்த காரணத்தால் 
குருந்த மலை என பெயர் வந்ததாகவும், அகத்தியருக்கு முருகன் குருவாக இருந்தது உபதேசித்ததால் குருந்த மலை என பெயர் வந்ததாகவும் இரு வேறு கருத்துக்கள் உண்டு.

˜மூலவர் குழந்தை வேலாயுத சுவாமி ஞான வடிவமாக மேற்கு நோக்கி அருள்பாலிப்பதும், பழநி முருகனைப் போல் காட்சிதருவதும் சிறப்பாகும் கருவறை விமானமும் பழநி முருகன் கோயிலில் இருப்பதைப் போன்றே உருவாக்கப்பட்டுள்ளது. அகத்தியரும் சூரியனும் கார்கோடன், புஜங்கள் எனும் நாகங்களும் பூஜித்த தலமிது. முருகனின் வாகனங்களில் மயிலுக்கும் நாகத்திற்கும் ஒரு தனிச் சிறப்புண்டு அல்லவா! இம் மலையினும் சுற்றியுள்ள இடங்களிலும் மயில்கள் தோகை விரித்து ஆடுவது கண்கொள்ளாக் காட்சி. .

சப்த காண்டத்தில் குருந்த மலை பற்றி குறிப்பு உள்ளது. மேலும் "குருந்த மலை மாலை " "குருந்த மலை பதிற்றுப் பத்து அந்தாதி ",  "குருந்த மலை பிள்ளைத்தமிழ் " , " குருந்த மலை திருப்புகழ்
  " போன்ற நூல்கள் இந்த குருந்த மலையின் சிறப்பை , பெருமையை பறை சாற்றுகின்றன..







Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

~~ அற்புதங்கள் அருளும் காரமடை நஞ்சுண்டேஸ்வரர் ! (Karamadai Nanjundeswarar ) ~~


சுமார் 1000 வருடங்களுக்கு மேல் பழமையான இந்த கோவில் காரமடை ரங்கநாதர் கோவிலின் அருகே இடதுபுறம் அமைந்துள்ளது. திருமண, சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் சிவன், அம்பாள், சிவதுர்க்கைக்கு வஸ்திரம் அணிவித்து, வேண்டிக்கொள்கிறார்கள்.

இக்கோயிலில் உள்ள சிவலிங்கம், பிற தலங்களைப்போல இல்லாமல் சற்று பட்டையாக இருக்கிறது. இந்த லிங்கம் செந்நிறமாக காட்சியளிப்பது மற்றொரு விசேஷம். இவருக்கு பிரதான ஆவுடையார் தவிர, சன்னதிக்குள் சிவலிங்கத்தைச் சுற்றி, மற்றொரு ஆவுடையார் போன்ற அமைப்பில் தரையில் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இவர் இரண்டு ஆவுடையார்களுடன் காட்சி தருகிறார். இந்த அமைப்பை காண்பது அரிது.

இந்த வித்யாசமான அமைப்பினால் கோவில் பூசாரி, ஆவுடையாரின் மேல் நின்று இன்னொரு ஆவுடையாரின் மேலுள்ள லிங்கத்தை பூசை செய்வது போல் உள்ளது (ஒரு லிங்கத்தின் மேல் நின்று மற்றொரு லிங்கத்தை பூசிப்பது போல). 

இன்னுமொரு முக்கிய விஷேசம், பிரதோஷ காலங்களில் சிவனுக்கு அமுது ( வெறும் சாதம் சிறிதளவு நெய் கலந்து) திருமேனியில்  சார்த்தபடுகிறது.. பின்னர் அந்த அமுதை எடுக்கும்போது லிங்கத்தின் கழுத்தருகே சிறிய அளவில் பச்சை நிறமாக அமுது காட்சி தருகிறது (நஞ்சை உண்ட சிவனின் கழுத்தில் ஆலகால விஷம் தங்கி உள்ளதாக ஐதீகம்).. இத்தனைக்கும் அமுது படைக்கும் முன்பு சிவலிங்கம் நன்கு தேய்த்துக் கழுவப் படுகிறது..  

முகலாயர் காலத்தில் கோவில்கள் சேதப்படுத்தப்பட்ட போது, நஞ்சன்கூடு (மைசூரு)  நஞ்சுண்டேஸ்வரர்  கோவிலிலிருந்து எடுத்து வரப்பட்ட கல்லைக் கொண்டு இங்கு கோவில் அமைக்கப்பட்டது. எனவே அந்த கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து வழிபடலாம் .

மதுரை மீனாட்சியம்மன் கோயில் போலவே, சிவன் சன்னதியைச் சுற்றிலும் கோஷ்டத்தில் 8 யானைகள் சுவாமி விமானத்தை தாங்கியபடி அமைக்கப்பட்டிருக்கிறது.அம்பாளின் திருநாமம்-லோகநாயகி அம்பாள். விநாயகர், ஆறுமுகவேலவர், சண்டிகேஸ்வரர், கால பைரவர் ஆகியோருக்கும் இங்கே சன்னதிகள் உண்டு.

நவராத்திரி விழாவின் பத்தாம் நாளில் ரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இக்கோயிலுக்கு வந்து அம்பு போடும் நிகழ்ச்சிக்கு சிவனை அழைத்துச் செல்வது விசேஷம். அப்போது சிவன், பெருமாள் இருவரும் அருகருகில் செல்கின்றனர். அந்நேரத்தில் மட்டுமே இவ்விருவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.

அனைவரும் தரிசிக்க வேண்டிய அற்புதமான ஸ்தலம்.  வாய்ப்பை உருவாக்கி சென்று வாருங்கள்.