இன்று 66 வது சுதந்திர தினம் கொண்டாடுகிறோம். ஆனால் இது உண்மையான சுதந்திரமா ?
சொந்த நாட்டின் மீனவக் குடிமகனை காப்பாற்ற முடியவில்லை! வெளிநாடு வாழ் இந்தியனுக்கு குரல் கொடுக்கும் நாம் சொந்த நாட்டின் குடிமகனின் சவக்குழிக்கு மேல் நின்று கொண்டல்லவா சாகசம் பேசுகிறோம்?! என்ன ஒரு வெட்கக்கேடு !!!
இன்னும் சுமார் 1.6 இலட்சம் கொத்தடிமைகள் இந்தியாவின் குவாரிகளில், வட இந்திய முறுக்குக் கடைகளில், சாலையோரப் பணிகளில், தொலை தூர எ ஸ்ட்டேட்களில் , கட்டுமானப் பணிகளில் முடங்கியுள்ளனர் .
அரசுத்துறைகளின் மற்றும் அரசியல்வாதிகளின் லஞ்ச லாவண்யங்களில் நாட்டின் பொருளாதாரம் சிக்கி சீரழிந்து கொண்டு இருக்கிறது. நாட்டின் கனிம வளங்கள், சுயநல தனி நபர்களை , கடமை தவறிய அதிகாரிகளை வளப்படுத்தி இருக்கிறது...
எங்கும் கொள்ளை ! எதிலும் கொள்ளை !!!
ஆற்றிலும் கொள்ளை! வனத்திலும் கொள்ளை! மலையிலும் கொள்ளை ! சுடுகாட்டிலும் கொள்ளை ! ஆன்மிகவாதிகள் பெயரில் கொள்ளை ! யோகா குருக்கள் கொள்ளை ! அடப் போங்கையா ....டாஸ் மாக்கில் கூட கொள்ளை அடிக்கிறார்கள் ....
கல்வித்தந்தைகள் (இல்லை கர்ப்பரேட் தந்தைகள்), LKG முதல் பட்டப் படிப்பு வரை மாணவர்களைக் கொள்ளை அடிக்கிறார்கள்..
நடுத்தெருவில் பெண்கள் மானபங்கப் படுத்தப்படுகிறார்கள். தந்தையின் முன் மகளை மானபங்கம் செய்கிறார்கள். வீட்டு வேளைகளில், நிறுவனங்களில் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப் படுகிறார்கள் .
இந்த இலட்சணத்தில் 66 வது சுதந்திர தினம் கொண்டாடுகிறோம். அதுவும் துப்பாக்கி முனைகளில் ?! எங்கு குண்டு வெடிக்கும்? எங்கு தீவரவாதிகள் கைவரிசை இருக்கும் என்று ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் போலீஸ் மற்றும் ராணுவ சுவர்களின் பின்னால் நமது சுதந்திர விழாக்கள் நடக்கின்றன.
இதுவல்ல சுதந்திரம்.... உண்மையான சுதந்திரம் இன்னும் தொலைவில் உள்ளது ....
No comments:
Post a Comment