பக்கங்கள்

Sunday, March 6, 2011

கலைஞரின் கடைசி நேர ஸ்டன்ட் என்னவாக இருக்கும் ?

அய்யா கருணாநிதி....

காங்கிரஸ் 3 சீட்டு கூட கேட்டபோது, வழக்கம்போல  கடிதம் எழுதாம, நானே கேள்வி - நானே பதில்கள் போடாம, அவசர அவசரமாக உயர்நிலை குழு கூடி கூட்டணி முறிவு என அறிவித்தீர்களே, இதுவே இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டபோது நான் என்ன செய்ய முடியும் என்று அமைதி காத்தீர்கள் ???? தமிழக மீனவர்கள் கொல்லப்படும்போது வெறும் வெற்று அறிக்கை மட்டும் விட முடிந்தது ???

தான், தன் குடும்பம் என்பவர்கள் மட்டுமே இப்படி ஒரு நிலைபாட்டை எடுப்பார்கள்... நீங்கள் ஏற்கனவே எடுத்து விட்டீர்கள்.... ஆனாலும் நீங்கள் ஒட்டு கேட்கும் போது தமிழின் பெயரால் கேட்கிறேன். ... தமிழர்களின் பெயரால்  கேட்கிறேன்...என ஒட்டு வாங்குவீர்கள்.

உங்கள் தமிழ் வளர்ப்பு எப்படி இருக்கிறது என்பதற்கு ஒரே ஒரு சான்று...

மக்கள் டிவி கூட தமிழ் மிகக் கூடிய வரை தமிழ் வார்த்தைகளை உபயோகம் செய்து தமிழ் மொழி, தமிழர்கள் பற்றி நிகழ்சிகளை ஒளி பரப்புகிறார்கள். உங்கள் கலைர் டிவி இல் மானடுகிறது, மயிலாடுகிறது (அரை குறை ஆடையில் ).  எங்கே போயிற்று உங்கள் செம்மொழி வளர்ப்பு, அறுவடை எல்லாம் ??? ஊருக்குதான் உபதேசமா ?

நான் எதிபார்ப்பது என்ன வென்றால், உங்கள் கடைசி நேர பிரயோகமாக, இது என் கடைசி தேர்தல், தமிழா எங்கே போயிற்று உன் இன மானம், எனக்கு வோட்டளித்து  தமிழன் மானத்தை காப்பாற்று என படுக்கையில் இருந்தபடி ஒரு அரசியல் ஸ்டன்ட் செய்வீர்கள்..  அனால் இதெல்லாம் கேட்க இங்கே பயித்தியக்காரன் யாருமே இல்லை என்பதுதான் உண்மை.  


Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

2 comments:

Unknown said...

இப்படியெல்லாம் யோசித்தால் நீங்கள் தமிழனா என்ற சந்தேகம் அவர்களுக்கு வந்துவிடும். தமிழன் வெறும் வாக்கு வங்கி மாத்திரமே அவர்களை பொறுத்தவரையில்.

Anonymous said...

Well Said. Watch out last 2 weeks before Election. There will be plenty of Kollywood drama will be staged including KR will not be feeling well and etc ....