பக்கங்கள்

Saturday, May 10, 2014

குரு இருந்த மலை " குருந்தமலை" (இன்னொரு பழனி ) - அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி கோயில், காரமடை (கோவை)


காரமடையிலிருந்து 5 கி.மீ. தொலைவில், கோயம்புத்தூரிலிருந்து 24 கி.மீ. தொலைவிலும்  அமைந்துள்ளது. 

சுமார் 750 வருடங்களுக்கு முன் இக்கோவில் உருவானதாக தெரிகிறது.  ஆலயத்தில் இடம்பெற்றுள்ள சிற்பங்கள் ஹோய்சாள மன்னர் காலத்தை ஒத்து இருக்கின்றன..

செல்வம் பெருகவும், புத்திரபேறு இல்லாத தம்பதியினர் குழந்தை வேலாயுதனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.

இங்கு "குருந்த மரங்கள்" நிறைய இருந்த காரணத்தால் 
குருந்த மலை என பெயர் வந்ததாகவும், அகத்தியருக்கு முருகன் குருவாக இருந்தது உபதேசித்ததால் குருந்த மலை என பெயர் வந்ததாகவும் இரு வேறு கருத்துக்கள் உண்டு.

˜மூலவர் குழந்தை வேலாயுத சுவாமி ஞான வடிவமாக மேற்கு நோக்கி அருள்பாலிப்பதும், பழநி முருகனைப் போல் காட்சிதருவதும் சிறப்பாகும் கருவறை விமானமும் பழநி முருகன் கோயிலில் இருப்பதைப் போன்றே உருவாக்கப்பட்டுள்ளது. அகத்தியரும் சூரியனும் கார்கோடன், புஜங்கள் எனும் நாகங்களும் பூஜித்த தலமிது. முருகனின் வாகனங்களில் மயிலுக்கும் நாகத்திற்கும் ஒரு தனிச் சிறப்புண்டு அல்லவா! இம் மலையினும் சுற்றியுள்ள இடங்களிலும் மயில்கள் தோகை விரித்து ஆடுவது கண்கொள்ளாக் காட்சி. .

சப்த காண்டத்தில் குருந்த மலை பற்றி குறிப்பு உள்ளது. மேலும் "குருந்த மலை மாலை " "குருந்த மலை பதிற்றுப் பத்து அந்தாதி ",  "குருந்த மலை பிள்ளைத்தமிழ் " , " குருந்த மலை திருப்புகழ்
  " போன்ற நூல்கள் இந்த குருந்த மலையின் சிறப்பை , பெருமையை பறை சாற்றுகின்றன..







Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter
Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

3 comments:

viyasan said...

இலங்கையிலும் வன்னியில் குருந்த(ன்)மலை என்ற ஊர் உண்டு. அங்கிருந்த குருந்தமலை ஐயனார் கோயில் மிகவும் பிரபலமானது, ஆனால் அதை இன்று அகற்றி விட்டு, புத்தர் சிலையை நிறுவி, புத்த கோயிலாக்கி விட்டார்கள் சிங்கள புத்தபிக்குகளும், அகழ்வராய்ச்சியாளர்களும்.

Anonymous said...

வணக்கம்

ஆலயத்தைப் பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் படங்கள் மிக அழகாக உள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

என் மனசு said...

மிக்க நன்றி ரூபன் , வியாசன்.. திரு அகிலனின் பக்கத்தை முடிந்தால் பார்வையிடவும் (http://www.agiilan.com )