இன்னைக்கு காலைல சீக்கிரம் ரெடியாகி 9 மணிக்குள்ளாக வோட்டும் போட்டு ஒரு ஜனநாயக கடமையாற்றி வந்தாச்சு.
என்ன நீங்க எல்லாம் வோட்டுப் போட்டாச்சா?
வீட்டுக்கு வந்து யோசிச்சு பாத்தா ஒரு விஷயம் புலப்பட்டுச்சு. இந்த 20 நாட்கள் அத்தனை அரசியல் கட்சிகளின் கண்களிலும் அனைத்து அரசுத் துறைகளிலும் விரலை விட்டு ஆட்டிய தேர்தல் ஆணையம் போன்ற ஒரு அதிகார அமைப்பு (கட்சி சாரா ) ஒன்று நிரந்தரமாக நமக்குத் தேவை. இப்படி ஒரு அமைப்பு இருக்கும் பட்சத்தில் அதற்க்கு அதிகாரங்கள் பரவலாக்கப்படும் பட்சத்தில், மணல் கொள்ளைகள், அரிசி கடத்தல், அரசு அலுவலக ஊழல்கள் இவை ஆனதும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் அல்லது வெகுவாக குறைந்து விடும். (குறிப்பு : குறைந்து விடும் அல்லது கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று தான் சொல்கிறேன். முற்றிலும் ஒழிந்து விடாது). அன்னா ஹசாரே வலியுறித்திய ஊழலுக்கு எதிரான, அரசை தட்டி கேட்க்கக் கூடிய மக்கள் பிரதிநிதிகளுடன் கூடிய ஒரு அதிகார அமைப்பு கட்டாயம் நமக்கு தேவை. அதற்காக நாம் குரல் எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
ஆனா இதற்க்கு ஒரு அரசியல் கட்சியும் சம்மதிக்காது. இங்க கேள்வி கேட்க ஆள் இருந்தா கருணாநிதி மாதிரி ஆளுங்க அய்யகோ, இங்கே எனது தலைமையில் ஆட்சி நடக்குதா இல்லையானே தெரியலை அப்படின்னு நீலிக் கண்ணீர் விடுப்பார்கள். ஒரு இனமே அழிக்கப்பட்ட போதும், இமாலய ஊழல் நடந்த போதும் அத்தனை பேர் கூக்குரல் எழுப்பியும், நீ என்ன கூப்பாடு போட்டாலும் என் இஷ்டப்படிதான் நடப்பேன் என தெனாவெட்டாக, இல்லையில்லை... திமிராக பேசினார்களே இந்த ஈனங்கெட்ட அரசியல்வாதிகள். அவர்களுக்கு எதிராக நம்மால் அப்போதே ஒன்றும் செய்ய முடியவில்லை. 5 வருடங்களுக்கு ஒரு முறை வரும் தேர்தலுக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம்.. என்ன பொழப்புடா இது?
ஒரு குடிமகன் சராசரியாக 9 முதல் 10 முறை தன் வாழ் நாளில் வாக்களிக்க முடியும். அவ்வளவுதானா அவனுக்கு வாய்ப்பு?
அதுவும் இந்த தேர்தல்கள் நம்மை பிச்சை காரர்களாக்கும் வேலையே தான் செய்கிறது.. வரைமுறை இல்லாத, தகுதியற்ற பிரச்சாரங்கள்... இவை நம்மை வேதனைப்பட வைக்கிறது. ஏன் இவ்வளவு நடிகர்களை நாம் அரசியலில் வளர்த்திருக்கிறோம்? எங்கிருந்து வந்தார்கள் இவர்கள் ??? எந்த போராட்டத்தில் சிறை சென்றவர்கள் இவர்கள்? காசை வாங்கி AC காரில் பயணம் செய்யும் இவங்களிடம் நம் வாழ்வை நடத்தும் உரிமையை அளிப்பதா?
அன்னா ஹசாரே வின் உறுதிக்கு கிடைத்த வெற்றி நமக்கு ஒரு வெளிச்சம் காட்டுகிறது. நாம் நம் குரலை உயர்த்த வேண்டிய நேரம் இது ....
என்ன சொல்றீங்க நீங்க ?