தி மு க , காங்கிரஸ் இருவரும் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு மற்றவர்களை முட்டாளாக்கப் பார்கிறார்கள். திமுக வின் rising sun, falling sun ஆகிவிடும் பயம்.
தி மு க கூட்டணியை முறித்துக் கொள்வேன் என்று பயம் காட்டுவது :
* கலைஜர் டிவி இல் சிபிஐ ரைட்
* 2G இல் கனிமொழி, தயாளுவிடம் சிபிஐ விசாரணை
* கூட்டணி ஆட்சி கோரிக்கை (இவர்கள் மட்டும் மத்திய அரசில் பங்கு கேட்பார்கள். மற்ற யாரும் இவர்களிடம் கேட்க கூடாது.. என்ன கொடும சார் இது..)
காங்கிரஸ் மிரட்டுவது :
* அதே சிபிஐ ரைட்
* தற்போதைய தமிழக சூழ்நிலை (எத்தனை நாள் தான் குனிஞ்சு குட்டு வாங்குவது )
* தற்போதைய பயம் (திமுகவும் இல்லை, விஜயகாந்தும் இல்லை என்றால் .... ஓணாண்டி புலவர் கதை ஆகிவிடும் நிலை)
இவனுங்க கோடிகணக்கில் பணம் சம்பாதிக்க, கூட்டணி தர்மம் என்கிறார்கள். எங்கயா இருக்கு தர்மம்?
தேர்தல் கமிசனருக்கு ஒரே ஒரு வேண்டுகோள் !
இன்னும் தேர்தல் தேதியை தள்ளி போடாமல், முடிந்தால் இன்னும் முன்கூட்டியே தேர்தல் நடத்துங்கள்.. இந்த மாதிரி அரசியல்வியாதிகளின் தொல்லை தாங்கலை சாமி....
1 comment:
சரியா சொன்னீங்க. இவங்க போதைக்கு நம்மள ஊறுகாய் ஆக்கறாங்க
Post a Comment