கடாபி தனக்கு எதிரான மக்களை கொல்ல ஆரம்பித்ததும் அமெரிக்க முதல் ஐநா வரை வரிந்து கட்டிக்கொண்டு ஏன் கூப்பாடு போடுகிறார்கள் ? அமெரிக்கா உடனே போர்க் கப்பல்களை அனுப்புகிறது ! ஐநா தடை விதித்து அவசரகதியில் தீர்மானம் நிறை வேற்றுகிறது?
இதுவே ஏன் இலங்கையில் தமிழ் மக்கள் சொந்த நாடு அதிபரால் லச்சகனக்கில் கொல்லப்பட்ட போது எத்தனை நாடுகள் கூப்பாடு போட்டபோது அந்தக் கூக்குரல் இவர்களுக்கு விழ வில்லை ?
கடாபிக்கு ஒரு நியாயம், பக்சேக்கு ஒரு நியாயமா ?
இதேபோல் 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைபடயினரால் தொடர்ந்து கொல்லப்பட்டு வரும் நிலையில் கருணாநிதி கடிதம் மட்டுமே எழுதுவதேன் ? துக்கடா நாட்டை கண்டு இந்தியா பயப்படுவதேன் ? இல்ல்வளவு நடந்தும் இந்தியக் கடற்படை எங்கு இருக்கிறது, ஏன் ரோந்து வருவதில்லை ?
இப்படி எத்தனையோ விடை தெரியாத 'ஏன்' கள் ?
ஓட்டுக்கு காசை வாங்கும் தமிழன் இருக்கும் வரை இந்த அவலம் தீராது...
இந்த தேர்தல் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரட்டும். நீங்கள் மாற்றம் செய்பவர்களாக மாறுங்கள்....
2 comments:
அமெரிக்கனுக்கு இந்தியாவின் சப்போர்ட் வேண்டும்...அதனால் இங்கே மௌனம். லிபியாவின் எண்ணெய் வேண்டும் எனவே அங்கே போர்கப்பல் பயணம். குள்ள நரி அமெரிக்கனின் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரும்
உண்மை தான்... அமெரிக்க மட்டுமல்ல... குள்ள நரி ஆட்டத்தை இந்தியாவும் ஆடுகிறது ...
Post a Comment