மெடிக்கல் இம்ப்லான்ட்ஸ் என்பதைக் கேள்விப் பட்டு இருப்பீர்கள். இம்முறை இப்போது மிக பிரபலம். சாதாரணமாக நோயாளிகளுக்கு செய்யப்படும் இதை நல்ல ஆரோக்கியமான ஒருவர் வேண்டும் என்றே செய்து கொண்டார் என்றல் என்ன நினைப்பீர்கள் ? Wafaa Bilal இவர் ஆரோக்கியமான ஈராக்கிய துணை ப்ரொபசர். நியூ யார்க் பல்கலைகழகத்தில் வேலை செய்யும் இவர் தன் தலையில் இம்ப்லான்ட்ஸ் முறையில் ஒரு காமெரா ஒன்றை பொருத்தி கொண்டுள்ளார். இந்த காமெரா ஒரு நிமிட இடைவெளியில் புகைப்படங்களை எடுத்து வயர்லெஸ் முறையில் கத்தாரில் உள்ள ARAB MUSEUM OF MODERN ART க்கு படங்களை அனுப்பும். 3rd I எனப்படும் Arab Museum show க்கு இவர் பங்களிப்புக்காக இதை செய்கிறார். பாடம் எடுக்கும் நேரங்களில் இவர் லென்ஸ் கேப் மூலம் காமெராவை மூடிக் கொள்கிறார்.
இந்த கேமரா 1 வருடம் வரை படம் எடுக்கும் தன்மை கொண்டது. அதற்காக உடலில் வயர்களையும் மற்ற கருவிகளையும் எந்நேரமும் மாட்டிக்கொள்கிறார். என்ன வித்தியாசமான மனிதர்கள். ...
No comments:
Post a Comment