விக்கி லீக்ஸ் தளத்தை அமெரிக்கா முடக்கினாலும் ஸ்விஸ் டொமைனில் அது இன்னும் தொடர்கிறது ( பார்க்க காணொளி : http://www.collateralmurder.com/ ; www.wikileaks.ch ; http://213.251.145.96/ ).அமெரிக்க ராணுவத்தால் பத்திரிக்கைக்காரர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஒன்றுமறியா குழந்தைகள், பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள். விக்கி லீக்ஸ் அதிபரைக் (Julian Assange) கொல்ல அமெரிக்கா, ஆஸ்திரேலியா வுடன் கூட்டு சேர்ந்து செயல்படுகிறது.
கருணாநிதி >> என்ன ஒரு ஏமாற்றுக்காரர். இவர் ரம்ஞானுக்கு, கிருஸ்துமஸுக்கு வாழ்த்துக்கள் சொல்வார். ஆனால் தீபாவளிக்கு வாயைத் திறக்க மாட்டார். ஏன் எனில் இவர் ஆத்திகவாதியாம். ராடியா டேப் விவகாரத்திற்கு இன்னும் இவருடைய நானே கேள்வி, நானே பதில்கள் வரவில்லை. விக்கி லீக்ஸ் இலங்கைத் தமிழர்களின் படுகொலைகளை வெளியிட்டும் இவர் இன்னும் சினிமா கதை வசனம், பாட்டு எழுதிக் கொண்டு இருக்கிறார் . லண்டணில் ராஜபக்செ பயந்தது போல இந்திய வருகையில் அவர் பயந்தது இல்லை. இந்தியா சிகப்பு கம்பள வரவேற்பு குடுத்தது. தமிழர்கள்,தமிழ்க் காவலர்கள், தமிழ் மொழிக்கு ராயல்டி கேட்பவர்கள் ஒரு
சிறிய சலனம் கூட செய்யவில்லை.
மலேசிய எம்.பி. குலசேகரன் தனது அறிக்கையில்,
"விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்ப் பெண்களை இலங்கையில் ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக் கொல்லும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா. சபை விசாரணையை விரைவுபடுத்தி ராஜபக்சேவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர முயற்சி எடுக்க வேண்டும்..."
இப்படி ஒரு அறிக்கை கூட விட முடியாதா இந்தத் தமிழ் நாட்டுத் தலைவர்கள் ?
No comments:
Post a Comment