பக்கங்கள்

Wednesday, June 4, 2008

முதல்வருக்கு ஒரு பகிரங்க கடிதம்

நீங்கள் மனசாட்சியுடயவர்களாயின், இந்த கடிதத்தை நீங்கள் படிப்பதுடன் நிறுத்தாமல் இதில் உங்கள் கருத்துக்களை பின்னூட்டமளியுங்கள். மட்டுமல்ல, இதை உங்கள் நண்பர்களிடத்தும் கொண்டு சேருங்கள். ஒரு கை தட்டினால் ஓசை வருவதில்லை..... உங்கள் கைகளையும் சேர்த்து தட்டுங்கள் .... ஓசை ஒலிக்கட்டும் ... பலமாக......
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு .....
வணக்கம். தங்களின் 85 வது பிறந்த நாளை கொண்டாடிய இந்த வேளையில் உங்கள் முன் சில கோரிக்கைகளை வைக்கிறேன். நடப்பவைகளை கண்டு ஏதேனும் செய்ய முடியாதா இந்த சமூகத்திற்கு என்னும் ஆற்றாமையில் தான் இதை உங்களுக்கு எழுதுகிறேன்.
கோரிக்கை 1 :
பேருந்தில் நெடுந்தூரப் பயணங்கள் எல்லாருக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. எல்லா மக்களும் பெரும்பாலும் பேருந்தையே பயன்படுத்துகிறார்கள். ஆனால் பேருந்து நிலையங்களின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது? பேருந்து நிலையங்களில் பேருந்து நுழையும் முன்பே எல்லோரும் மூக்கைப் பொத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. அவ்வளவு துர் நாற்றம். மட்டுமல்ல, கிருமிகளின் கூடாரமும் கூட... எச்சில் களை, குப்பைகளை மிதிக்காமல் எங்கும் நகர முடியாது.
ஒவ்வொரு ஆட்சியும் , அரசியல்வாதிகளும் ஆட்சிக்கு வர இலவசங்களை வாரி இறைக்கிறார்கள். தாங்கள் கூட இலவச கலர் டிவி முதல் கியாஸ் அடுப்பு வரை அளித்திருக்கிறீர்கள். ஆனால் உண்மையாக தேவைப்படும் இலவசம் எது தெரியுமா? பேருந்து நிலையங்கள் முதல் அனைத்து சுற்றுலா தளங்கள் வரை அனைத்து பொது இடங்களிலும் இலவச பொதுக் கழிப்பிடங்களை அரசு சார்பில் அமைக்க வேண்டும். 2 ரூபாய்க்கு அரிசி என்கிறீர்கள் ...ஆனால் 2 ருபாய் கொடுத்து தானே சிறுநீர் கழிக்க முடிகிறது. சாமான்யர்களும், நடுத்தர மக்களும் இதற்க்கு ரொம்பவே யோசித்துதான் பொது இடங்களை திறந்த வெளி கழிப்பிடங்களாக மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
வெளி நாட்டுப் பயணிகள் முகம் சுளிப்பதுடன், தமிழ்நாடே ஒரு கூவம் போல நாற்றமெடுக்கிறது. சரி, காசு கொடுத்துதான் பொதுக் கழிப்பிடம் செல்கிறோம் என்றே வைத்துக் கொள்ளுங்கள். அதன் இன்றைய பராமரிப்பு எப்படி இருக்கிறது.. உடைந்த கதவுகள்... கைகளால் தொட முடியாத டப்பா .. நாற்றமெடுக்கும் அறைகள் ... இதற்கே 2 ருபாய் ... சுகாதாரமான சமூகத்தை உருவாக்குவது அரசின் கடமை... எனவே இலவச பொதுக் கழிப்பிடங்களை உடனடியாக அமல் படுத்துவதுடன் முறையான பராமரிப்பும் நடைபெற ஆவன செய்ய வேண்டும்.
கோரிக்கை 2 :
நெடுந்தூரப் பயணங்களில் பேருந்துகள் அவர் அவர்களுக்கு பிடித்த நெடுஞ்சாலை உணவகங்களில் பேருந்தை நிறுத்துவது வாடிக்கை. ஆனால் அங்கே எவ்வளவு கொள்ளை நடக்கிறது தெரியுமா? வேறு வழியே இல்லாமல் பயணிகள் இந்த உணவகங்களில் யானை விலை , குதிரை விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள். ( உதாரணத்திற்கு ... 13 ரூபாய் தண்ணீர் பாட்டிலின் விலை இங்கே 17 ரூபாய். 20 ரூபாய் குளிர் பானத்தின் விலை 27 ரூபாய். பொது மக்கள் என்ன பாவம் செய்தார்கள் . இந்த தினசரி பகல் கொள்ளைக் கு அரசின் நடவடிக்கை தான் என்ன ??? உடனடியாக இந்த வணிகர்களை தடை செய்வதுடன் அரசே தமிழ்நாடு சுற்றுலா கழகம் சார்பில் இத்தகைய கடைகளை நியாயமான முறையில், நியாய விலையில் நடத்த உத்தரவிட வேண்டும்.
கோரிக்கை 3 :
பிளாஸ்டிக் குப்பைகள் எங்கும் பெருகி வரும் நிலையில் சுற்றுச் சூழல் மிகவும் சீர்கெட்டு விட்டது. அனைத்து விலங்குகளும் இவைகளை உண்டு மரணிக்கின்றன. எனவே, குறிப்பிட்ட தடிமன் இல்லாத பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டும். பேப்பர் கப், தொன்னை போன்றவற்றின் உற்பத்திக்கும், விற்பனைக்கும் மானியம் அளிக்க வேண்டும்.
GREEN CITY, CLEAN CITY இந்த வரிகள் மாநகராட்சி சார்பில் பல இடங்களில் பார்க்க முடிகிறது. இவை கேட்க்க நன்றாகத்தான் இருக்கிறது . ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டுமானால் பெரும்பாலான பொது இடங்களில் குப்பை தொட்டிகளே இல்லை. குப்பைத் தொட்டியிலே குப்பையைப் போட நினைக்கும் என்னைப் போன்ற சில பொது ஜனங்கள் கூட குப்பைத் தொட்டி இல்லாதபடியால் வீதியிலே போட வேண்டி இருக்கிறது. நமது நாடும் சிங்கப்பூர் ஆக வேண்டுமானால், பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்க வேண்டும். தேவையான அளவு குப்பைத் தொட்டிகளை எங்கும் நிறுவ வேண்டும்.
கோரிக்கை 4 :
மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் .... இவை அரசின் விளம்பர வாசகங்கள். ஆனால் இன்று தமிழ்நாடுதான் மிக வேகமாக மரங்களை அழித்து வருகிறது. ஏற்க்கனவே, சாலை விரிவாக்கம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சாலையோர மரங்கள் விரகாகி விட்டன. ரியல் எஸ்டேட் புண்ணியவான்கள், தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களை அடுக்கு மாடி குடியிருப்புகளாக மாற்றி விட்டனர். வன விரிவாக்க துறை நன்றாக குறட்டை விட்டுத் தூங்குகிறது. அதன் செயல்பாடுகள் சொல்லும் விதத்தில் இல்லை. எனவே , அரசு தலையிட்டு, மரம் வளர்ப்பு என்பதை தீவிரப்படுத்த வேண்டும். இது உடனடியாக கவனிக்கப் பட வேண்டிய விஷயம்.
இன்னும் பல கோரிக்கைகள் இது போல நெஞ்சில் குமுறிக் கொண்டு இருக்கிறது. எனினும், மேலே கூறியவை உடனடியாக தீர்க்கப் பட வேண்டிய விஷயம் என்பதால் இவைகளை மட்டும் இப்போதைக்கு உங்கள் முன் வைக்கிறேன், உங்களைப் போன்றவர்களால் நல்லது செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் .....
Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

18 comments:

ambi said...

ம்ம், நியாமான கோரிக்கைகள் தான்.

ரொம்ப அனுபவபட்டு எழுதி இருக்கீங்க போல.

Athisha said...

அண்ணா இதுலாம் இன்னும் 100 வருஷம் ஆனாலும் நிறைவேத்தவே முடியாதுங்கண்ணா...

நீங்க சொன்னதுலாம் தமிழனோட கலாச்சாரம்,தொட்டில் பழக்கங்கணா...

அப்புறம் ஆட்சில இருக்கறவங்களுக்கு நெறய முக்கிய வேலைலாம் ( உங்களுக்கும் தெரியும் ) இருக்குங்கணா...

அதுனால நாம முதல்ல இதுலாம நம்ம தனிப்பட்ட வாழ்க்கைல கடைபிடிப்போங்கணா....

Athisha said...

அண்ணா இதுலாம் இன்னும் 100 வருஷம் ஆனாலும் நிறைவேத்தவே முடியாதுங்கண்ணா...

நீங்க சொன்னதுலாம் தமிழனோட கலாச்சாரம்,தொட்டில் பழக்கங்கணா...

அப்புறம் ஆட்சில இருக்கறவங்களுக்கு நெறய முக்கிய வேலைலாம் ( உங்களுக்கும் தெரியும் ) இருக்குங்கணா...

அதுனால நாம முதல்ல இதுலாம நம்ம தனிப்பட்ட வாழ்க்கைல கடைபிடிப்போங்கணா....

என் மனசு said...

இதுல அனுபவப் படறதுக்கு என்ன இருக்கு. ஒரு மனுஷனுக்கு நல்ல உணவு, நல்ல குடி நீர். நல்ல இருப்பிடம் , நல்ல சுற்றுப்புறம் தானே முக்கியம்...

குசும்பன் said...

எல்லாம் டாப், அதிலும் முதல் பாயிண்ட் டாப்போ டாப்.

இலவசக்கொத்தனார் said...

வழிமொழிகிறேன்.

ஸ்ரீ said...

எல்லாமே நியாயமான கேள்வி மற்றும் குமுறல்கள் தான். அரசு இவைகளை அமல் படுத்திலாம் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் நடக்குமா?

passerby said...

Reg toilet facilities at bus stations:

The passengers used to make the bus station an open urinal. They reasoned that the existing urinals withing the bus stations were so dirty that they were forced to use any place as their urinal. The Government then privatised the toilets and a nominal fee of 50 paise, which has now increased to Rs 2, was charged. Initially, it was better maintained. Later on, it fell on bad days, as you have narrated now.

What can the govt do if the citizens themselves have scant respect for public hygiene? Can the govt go back to the old method of free toilets?

The government bus stations are not maintained by the Fort St George but by the local municipalities; which, are run by the local citizens themselves. Why dont the local people agitate and set them right?

For everything, CM cant come to rescue.

A mother asks the son to urinate anywhere he likes; and rush back to the bus. At night, the women sit anywhere along the road, near the walls etc. when the bus halts. Less said about men, the better.

Civic sense is nothing to do with the government. Unless people change, for which there is no hope right now, TN will continue to be an open urinal for every one/

Regarding real estate matters:

This problem of making the state a concrete jungle is not confined to TN alone. All over India, the real estate sharks have started gobbling up all open land into private satellite towns. In a few decades, the village life becomes a part of folklore.

It is a huge economic and social problem.

However, in West Bengal,there is a glimmer of hope. There is a stout protest against making the state a barren land of MS buildings. Yesterday, Mamta Bannerjee successfully stopped a huge land allocations to a private real estate group from gobbling up huge acres for their real estate empire.

Karunanithi cant decide the minds of people. We are all greedy and want to lead a western type luxurious lives.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

எல்லாம் நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்,ஆனால் யார் கேட்கப் போகிறார்கள் தமிழகத்தில்

தமிழக அரசியலும்,ஆட்சியும் ஒரு விஷ வட்டத்தில் உழன்று,நாற்றமெடுத்துப் போய்க் கிடக்கிறது.

எல்லா ஆட்சியாளர்களுக்கும் தற்ப்புகழ்ச்சி என்னும் தன்னைச் சொறிந்து கொள்ளும் சுகமும்,லஞ்ச லாவண்யங்களின் மூலம் சொத்து சேர்ப்பதற்கும்,தலைமுறைகளுக்கு பாகப் பிரிவினை பஞ்சாயத்துகள் செய்வதற்குத்தான் நேரம் இருக்கிறது;இவையெல்லாம் போக அடுத்த தேர்தலுக்கு செய்ய வேண்டிய தில்லுமுல்லுகள்,பணப்பட்டுவாடா ஆகியவை....
போங்க சார்,வெறுத்துப் போய் புலம்ப வேண்டியதுதான் நம் தலையெழுத்து !

என் மனசு said...

நன்றாக சொன்னீங்க... சில விசயங்கள் சொல்லப்படுபவர்களைப் பொறுத்து முக்கியத்துவம் பெரும் (ரஜினிகாந்த், விஜயகாந்த், விஜய், அஜித் இவர்களுக்கெல்லாம் ஒரு தனி கூட்டமே இருக்கிறது ) . அதனால் தான் சில விசயங்களை ராமசாமி களும், குப்புசாமிகளும் சொல்வதை விட சில தலைவர்கள் சொல்வதில் முக்கியத்துவம் பெறுகிறது. எல்லாத்தையும் விட, திருவாளர் பொதுஜனம் தான் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் .

உண்மைத்தமிழன் said...

//அறிவன்#11802717200764379909 said...
எல்லாம் நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள், ஆனால் யார் கேட்கப் போகிறார்கள் தமிழகத்தில்?

தமிழக அரசியலும், ஆட்சியும் ஒரு விஷ வட்டத்தில் உழன்று, நாற்றமெடுத்துப் போய்க் கிடக்கிறது.

எல்லா ஆட்சியாளர்களுக்கும் தற்புகழ்ச்சி என்னும் தன்னைச் சொறிந்து கொள்ளும் சுகமும், லஞ்ச லாவண்யங்களின் மூலம் சொத்து சேர்ப்பதற்கும், தலைமுறைகளுக்கு பாகப் பிரிவினை பஞ்சாயத்துகள் செய்வதற்குத்தான் நேரம் இருக்கிறது.

இவையெல்லாம் போக அடுத்த தேர்தலுக்கு செய்ய வேண்டிய தில்லுமுல்லுகள், பணப்பட்டுவாடா ஆகியவை....

போங்க சார்,வெறுத்துப் போய் புலம்ப வேண்டியதுதான் நம் தலையெழுத்து!//

மெகா ரிப்பீட்டு..

இதுக்கு மேலேயும் ஏதாவது விளக்கம் வேணுங்களா..?

அருள் said...

நீங்கள் கூறியவை எல்லாமே என்னுள்ளும் இருக்கும் மனக்குமுறல்கள்தான்.....ஆனால் என்ன செய்ய முடியும் என்ற ஏக்கப்பெருமூச்சுதான் விடமுடிகின்றது...உங்கள் கருத்தை நானும் வழிமொழிகின்றேன்! இதற்க்கு பலன் ஏதேனும் கிடைக்கின்றதா என்று பார்ப்போம்...

மோகன் கந்தசாமி said...

சென்னை மேயருக்கு ஒரு கார்பன் காப்பி போட்ருங்க. அவர் கொஞ்சம் சுறுசுறுப்பு போல தெரியுது.

கிரி said...

இது அனைவருக்கும் இருக்கும் எதிர்பார்ப்புகள் தான். ஆனால் இதெல்லாம் நடக்கும் என்று தோன்றவில்லை. ஆனானப்பட்ட சிங்கப்பூர் லேயே லிட்டில் இந்தியா பகுதியை ஒன்றும் செய்ய முடியவில்லை. நம்ம ஊரெல்லாம் ஏமாத்திரம். இதில் அரசை குறை கூறி பயனில்லை. தவறு நம் மீதும் உள்ளது. கழிவறை இருந்தும் வெளியே தான் ஒண்ணுக்கு போவேன்னு அடம்பிடிக்கும் மக்கள் ஏகப்பட்ட பேர் இருக்காங்க. நம் மக்களின் எண்ணங்கள் மாறும் வரை, எத்தனை கட்டுப்பாடுகள் மற்றும் வசதிகள் இருந்தாலும் இந்த நிலை மாறப்போவதில்லை. இதெல்லாம் இப்போதைக்கு நடக்கும் என்று நம்புகிறீர்களா? மனதை தேற்றி கொள்வதை தவிர வேறு வழி இல்லை நமக்கு.

உங்களின் பதிவுக்கு என் வாழ்த்துக்கள்.

Anonymous said...

ஒரு சிறிய வேண்டுகோள். கட்டுரையானது justify என்று align செய்யப்பட்டுள்ளதால் என்னைப் போன்று பயர்பாக்ஸ் உலாவியில் படிப்பவர்களுக்கு பூச்சி பூச்சியாய் தெரிகிறது. அதை தவிர்த்தால் மற்ற உலாவி browser க்கு ச் செல்லாமல் எளிதில் படிக்க இயலும்.

கிரி said...

நீங்கள் இந்த பதிப்பை நிறுவினால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

http://www.mozilla.com/en-US/firefox/all-rc.html

துளசி கோபால் said...

உங்கள் கருத்துகளுக்கு வழிமொழிகின்றேன்.

கழிப்பிடங்களைப் பொருத்தவரை.....

பெண்களுக்கு கொஞ்சம்கூட வசதியே இல்லை(-:

Tech Shankar said...

super postnga.