பதித்துப் போன காலடித் தடங்களில்
இன்னும் இருக்குதடி ஈரம்.
என் விடியலின் நீளம்
உன்னால் இன்னும்
கூடிக்கொண்டே போகுதடி.
யாருக்கும் தெரியாமல்
கசியும் என் கண்கள்
தொலைத்த தூக்கங்கள் தான் எத்தனை எத்தனை...
என் சுகமும், துக்கமும்
நீதான் என ஆனபின்
துரந்தேன் யாவட்ரையும்
உனக்காக.....
என் கண்களின் ஈரமும்,
மனசுக்குள் உன் காலடி காலடி ஈரமும்
காய்வதற்க்குள் என்
கை பிடித்து விடடி என் அன்பே...
1 comment:
பாவங்க நீங்க! எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வருது!
Post a Comment