பக்கங்கள்

Sunday, August 14, 2011

புட்டபர்த்திக்கு பிறகு மேல்மருவத்தூரும் ???????

செய்திகளில் பார்த்திருப்பீர்கள்... சாய்பாபாவுக்குப் பிறகு புட்டபர்த்தி  வெறிச்சோடிப் போய்விட்டது. அங்கு எல்லாத் தொழிலும் முடங்கி விட்டது. வாழ்க்கை நடத்துவதே சிரமம் ஆகி விட்ட புட்டபர்த்தி இன்னும் சில மாதங்களில் கை விடப்பட்ட ஊராகி விடும். சாய்பாபா யாரையும் தனது வாரிசாக அறிவிக்காத நிலையில் புட்டபர்த்தியின்  மொத்த பொருளாதாரமும் முடங்கி விட்டது.  
சரி.. என்ன நடக்கிறது மேல் மருவத்தூரில்?
மேல்மருவத்தூர் 'அம்மாவின்' தொழில் நகரம். அவரது பள்ளிகள் கல்லூரிகளால் ஊரே நிறைந்துள்ளது. ரியல் எஸ்டேட் உட்பட அனைத்தும் கோவில் மற்றும் அம்மா இவர்களை சார்ந்தே உள்ளது.  இவரும் தனது வாரிசை அறிவிக்காத நிலையில் ஊரின் எதிர்காலம் புட்டபர்த்தியை  எண்ணிப் பார்க்க செய்கிறது. நீங்கள் ஏதும் அங்கே சொத்து வாங்கி உள்ளீர்களா? வாங்கப் போகிறீர்களா?? கவனமப்பா... கவனம்....

சமச்சீர் கல்வியா? தரமான கல்வியா?

இதெல்லாம் ஒரு  தரமான  கல்வியா  என்று சொல்கிற வகையில் நம் கல்வித்தரம் இப்போது இருக்கிறது. வாழ்க்கைக் கல்வியை இவை நம் தலை முறைகளுக்கு சொல்லித் தரவில்லை. தினமும் இரவு 9 மணிக்கு  மக்கள் டிவி இல் ஒளிபரப்பாகும் 'கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை' பார்பவர்களுக்குத் தெரியும் நம் குழந்தைகளின் பொது அறிவு எப்படி இருக்கிறது என்று. பத்தாவது படிக்கும் பெண் சொல்கிறாள் நம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் 'செம்மொழியாம் தமிழ் மொழியாம்'... கடவுளே ! பிரதமர் யார் என கேட்டால் வருகிறது பதில் அப்துல்கலாம்  என்று. எங்க போய் முட்டிக்கிறது. 3 நாட்களுக்கு முன்னால் நில நடுக்கம் வந்தபோது என்ன செய்வது என்று மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தெரிய வில்லை. குறைந்த பட்சம் வகுப்பறையை விட்டு வெளியேறுவது,  மேசைக்கு கீழே மறைந்து கொள்வது என அடிப்படை  விசயங்களைக் கூட இந்த கல்வி முறை போதிக்க வில்லை.

குறைவான பாட திட்டங்களைக் கொண்ட இந்த சமசீர் கல்வியை பயிலும் நம் குழந்தைகள் கண்டிப்பாக தேசிய அளவில் மற்ற போட்டிகளுக்கு, மேல் படிப்பிற்கான தகுதி தேர்வுகளை எதிர் கொள்வார்களா என்பது பெரிய கேள்விக்குறி?!