சும்மா பொறி கடலை தற மாதிரி ஆளாளுக்கு லேப்டாப் தரேன்னு ரோட்ல போற வறவன் எல்லாம் அறிக்கை விடறான். ஒரு வேல எல்லாருமே மாணவர்களுக்கு தரேன்னு சொல்லி இப்படி ஒரு லேப்டாப் கொடுத்தா எப்படி இருக்கும் ?
சும்மா ஒரு ஜாலி கற்பனை தான்...
மிக்சி , கிரைண்டர், பேன், லேப்டாப், ஆடு, மாடு, பணம், அரிசி, தாலி, தங்கம் - னு ஒவ் வொண்ணா தராம பேசாம தினமும் காலைல, சாயங்காலம் டிபன், மதியம் சாப்பாடு இப்படி குடுத்தீங்கன்னா .. நாங்க பாட்டுக்கு காலை நீட்டி படுத்துக் கிட்டு மானாட மயிலாட டிவி ல பார்த்துகிட்டு இருப்போம்... ஹி....ஹி... கொஞ்சம் கரண்ட் கொடுங்கப்பா....
(பின்னணியில் ஒரு பாட்டு கேட்கிறது ...எ..ஆர் ரஹ்மான் இசையில் ....)
செம்மொழியான தமிழ் மொழியாம்......
உழைத்து வாழ்ந்தோம், உழைத்து வாழ்வோம்...
பின் குறிப்பு: ப்ளீஸ் யாராவது இந்த பாட்ட இப்போதைய சூழ்நிலைக்கு வரிகளை மாத்தி ரீமிக்ஸ் பண்ணுங்களேன்!